×

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம், ஜூலை 24: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி), பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருணகுமாரி அறிவுரையாற்றினார். இஎஸ்எஸ்கே கல்வி குழுமத்தின் துணை பதிவாளர் சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சுதந்திரமாக இச்சமூகத்தில் வாழ வேலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, வேலை வாய்ப்பை பெற்ற பெண்களே இச்சமூகத்தில் தனித்துவம் மிக்கவர்களாக திகழ இயலும் என்றார். விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பிரபாவதி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறும் எளிய வழிமுறைகள், அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். வேலை வாய்ப்பு அலுவலக துணை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் பேசுகையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பணிகள், பல துறைகளில் உள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சி, மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரித்தி நன்றி கூறினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை