விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூலை 24: விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அகவிலைப்படியை நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியே பென்சன் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கும் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் அமல்படுத்த வேண்டும். பென்சன் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலசங்கம் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மனோகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கரன் முன்னிலை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் பாலு வரவேற்றார். ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தியாகராஜன் நன்றி

கூறினார்.

Advertising
Advertising

Related Stories: