சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மழை வேண்டி மரம் நடுதல் விழா

சின்னசேலம், ஜூலை 24: சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் உத்தரவின்படி, சின்னசேலம் செயல் அலுவலர் ஆறுமுகம் மேற்பார்வையில் அம்சாகுளம், திரவுபதி அம்மன் கோயில் தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு ஒற்றைவாடைத்தெரு உள்ளிட்ட பகுதியில் மரம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.இந்த  நிகழ்ச்சிக்கு தலைமை எழுத்தர் விழிச்செல்வன், துப்புரவு ஆய்வாளர் ராஜா முன்னிலையில் நாவல், கொன்றை, புங்கம், பூவரசு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டது. இளநிலை உதவியாளர்கள் சரவணன், சந்திரசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில்குமார், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். புவி வெப்பமயமாதலை தடுக்கவும், மழை வேண்டியும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் கிராம பகுதிகள் மற்றும் பேரூராட்சிகளில் மரக்கன்றுகளை நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: