வட்டார வளமையத்தில் மருத்துவ முகாம்

சங்கராபுரம், ஜூலை 24: சங்கராபுரம் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகன்யா தலைமை தாங்கினார். சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர் நடராஜன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள்  ரங்கநாதன், ஞானப்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் முகாமை துவக்கி வைத்தார். இதில் குழந்தைகள் நல மருத்துவர் சிவலிங்கம், பள்ளி சிறார் நல மருத்துவர் சுகுணா, மனநல மருத்துவர் பிரவீணா, மருத்துவர்கள் செந்தில்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை கண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனை வழங்கினார்கள். இதில் சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் அருள்தாஸ், ஜான், மேரி, எழில், ஆசிரியர் பயிற்றுநர்கள் கிருஷ்ணன், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: