ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

மயிலம், ஜூலை 24: மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட துணை செயலாளர் சிலம்புச்செல்வன் தலைமை தாங்கினார். பணி மேற்பார்வையாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி கடந்த மே மாதம் 31ம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் ஊழியர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் பாதித்தது.  ஊராட்சி செயலர்கள் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி உதயகுமார் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: