×

அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவேண்டாம் மழைக்காலத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

விருத்தாசலம், ஜூலை 24: விருத்தாசலம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சேகர் விடுத்துள்ள செய்திகுறிப்பு.அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் உயர் அழுத்த மற்றும் தாழ்வு அழுத்த மின்கம்பிகளை பொது மக்கள் தொடவேண்டாம். உடனடியாக தங்களுடைய பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லவேண்டாம்  எல்.சி.பி.(மின் கசிவு தடுப்பான்) யை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திட வேண்டும்.மின்கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. துணிமணிகளை அதில் உலர்த்தக்கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர்களின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்தாதீர்கள்.பொது மக்கள் தங்கள் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்