×

விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

சேத்தியாத்தோப்பு, ஜூலை 24:  சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில், வணிகர்களுடான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். எஸ்ஐ சக்திவேல் முன்னிலை வகித்தார். எஸ்ஐ மாணிக்கராஜா, தனிப்பிரிவு ஏட்டு வெங்கடகிருஷ்ணன் உட்பட சேத்தியாத்தோப்பு வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுப்பது,கண்காணிப்பு கேமராக்கள் வைக்காதவர்கள் உடனடியாக வைப்பது, அறிமுகமில்லாதவர்கள் நடமாட்டம் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் அளிப்பது, தற்போது அதிகளவில் நடைபெறும் எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்வதை உடனடியாக தடுப்பதற்கு அம்மருந்தை உரிய அனுமதி பெற்று விற்பவர்களை தவிர மற்றவர்கள் விற்பனை செய்தால் அவர்களின்மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பது, அனைவரும் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றி விபத்தில்லா நகராக சேத்தியாத்தோப்பு நகரை மாற்றுவது.சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்ப்பவர்களின்மேல் விரைவான நடவடிக்கை, சேத்தியாத்தோப்பு பகுதி பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கிராமங்கள்தோறும் பொதுமக்களோடு இணைந்து பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து அவர்களை காப்பதற்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன், நிர்வாகிகள் பக்கிரிசாமி, மணிமாறன், ஆனந்தன், கிஷோர் குமார், மகாலிங்கம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது