×

பண்ருட்டியில் செயற்கை கைகள் பொருத்தும் முகாம்

பண்ருட்டி, ஜூலை 24:   பண்ருட்டி பதம் ஜூவல்லர்ஸ் தொழில் அதிபர் பதம்ராஜ் ஜெயின் பெற்றோர்கள் அஜித்ராஜ் ஜெயின், கமலா பாய் ஆகியோர் நினைவாக கை இல்லாதவர்களுக்கு செயற்கை கை பொருத்தும் முகாம் பண்ருட்டியில் நடந்தது. புனே டவுன் ரோட்டரி சங்கம், நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்கம், பண்ருட்டி லயன்ஸ், ஜெயின் சங்கம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தின. இதில் பண்ருட்டி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். இதில் மருத்துவர்களிடம் முறையாக சிகிச்சை மேற்கொண்ட 200 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள அதிநவீன செயற்கை கைகள் பொருத்தப்பட்டது. இதில் பல்வேறு சங்க நிர்வாகிகள், ஜெயின் சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பதம் ஜூவல்லர்ஸ் தொழில் அதிபர் பதம்ராஜ் ஜெயின் நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு