×

ஓபிஆர் கல்வி நிறுவன மாணவிகள் தடகள போட்டிகளில் சாதனை

கடலூர், ஜூலை 24:  கடலூர் மாவட்ட தடகள கழகமும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகமும் இணைந்து அண்ணாமலை பல்கலைகழகத்தில் தடகள விளையாட்டு போட்டிகளை நடத்தின. இதில், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளலார் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 10 பேர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.பிஏ இரண்டாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி கவிதா, நீளம் தாண்டுதலில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும், 2000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றார். மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி தமிழ்மணி, 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், தப்பித்தவறி தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றார்.
பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவி திவ்யா, நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும்,  தத்தி தவறி தாண்டுதலில் மூன்றாம் இடத்தையும் பெற்றார். பி.காம் மூன்றாமாண்டு மாணவி செவ்வந்தி, 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் இரண்டாம் இடம் பெற்றார். பிஏ முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி பவித்ரா, ஈட்டி எறிதலில் மூன்றாம் இடமும், 11ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, நீளம் தாண்டுதல் இரண்டாமிடமும், அதே  வகுப்பு மாணவி அனிதா, உயரம் தாண்டுதலில்
மூன்றாமிடமும் பெற்றார்.தடகள போட்டிகளில் வெற்றி பெற்று ஓபிஆர் கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்த்த மாணவிகளை தாளாளர் டாக்டர் செல்வராஜ், சால்வை, சான்றிதழ் அளித்து பாராட்டினார். கல்லூரி துணை முதல்வர் கவிதா தேவி, உடற்கல்வி இயக்குனர்கள் ராமமூர்த்தி சுஜாதா மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்