நிலத்தடி நீர்மட்டம் உயர கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

வீரவநல்லூர், ஜூலை 24:  கன்னடியன் கால்வாய் பாசன பகுதியில் விவசாயம் சார்பு தொழில்களான கால்நடை வளர்ப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பெருகிட கால்வாயில் தண்ணீர் திறந்திடக்கோரி கன்னடியன் கால்வாய் விவசாய சங்கத்தினர் சேரன்மகாதேவி சப் கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கன்னடியன் கால்வாய் பாசனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகள் குடிநீரின்றி மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வருவதில்லை. எனவே கால்நடைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட குறைந்தது 10 தினங்களுக்காவது கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் கன்னடியன் கால்வாய் விவசாய சங்கத்தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்பநயினார், பொருளாளர் ரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: