கடையம் அருகே தறிக்ெகட்டு ஓடிய மணல் லாரி ஆக்சில் ‘கட்’

கடையம், ஜூலை 24: ஆம்பூரில் தறிக்ெகட்டு ஓடிய மணல் லாரி சக்கரம் கட் ஆனது.

கடையம் அருகே உள்ள தனியார் குவாரியிலிருந்து நேற்று காலை எம் சேண்ட் மணல் ஏற்றிய டிப்பர் லாரி அம்பை பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. லாரி ஆம்பூர் அருகே சென்ற போது பாலம் அருகில் சக்கரம் கழன்றது. வண்டியில் ஈரத்துடன் அதிக பாரத்தில் மணல் இருந்ததால் லாரி கவிழாமல் அப்படியே நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடையம் பகுதியில் பல்வேறு குவாரிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் எம்சேண்ட் மணல்கள் அதிகளவு பாரத்துடன் லாரிகள், டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்வதால் வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மணல் லாரிகள் அதிவேகத்துடன் செல்லும் போது எதிர்வரும் வாகனங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த லாரி சக்கர கட் ஆன பகுதி பாலம் வேலை நடந்து முடிந்த பகுதியாகும். வேகம் குறைக்கப்பட்டதால் பெரிய விபத்து ஏற்படாமல் நின்றது. இதே பகுதியில் ஒரு வாலிபர் கீழே விழுந்து இறந்துள்ளார். கடந்த மாதம் அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியதும் இதே பகுதி என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: