×

தென்காசியில் ரயில் பயணிகள் நலசங்க நிர்வாகிகளிடம் தனுஷ்குமார் எம்பி ஆலோசனை

தென்காசி, ஜூலை 24:   தென்காசி ரயில் நிலையத்திற்கு வந்த தனுஷ்குமார் எம்.பியை நகர திமுக செயலாளர் சாதிர் வரவேற்றார். பின்னர் தென்காசி, செங்கோட்டை ரயில்வே பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தென்காசி ரயில்வே பயணிகள் நலச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் மீண்டும் 7.15 மணிக்கே புறப்பட வேண்டும். செங்கோட்டை-நெல்லை ரயில் முன்பு போல் 6.40 மணிக்கு புறப்படும் வகையில் மாற்ற வேண்டும். சென்னை-கொல்லம் ரயிலில் கூடுதலாக 11 பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை-கோவை தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் புதிதாக கழிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பழைய தொட்டிகளிலேயே இந்த கழிவறைகள் இணைக்கப்பட்டுள்ளதால் நிரம்பி வழிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தென்காசியில் கூடுதல் டிக்ெகட் கவுன்டர்கள் அமைக்க வேண்டும் என்றார்.
செங்கோட்டை ரயில்வே பயணிகள் நலச்சங்க அசோசியேசன் தலைவர் முரளி, துணைத்தலைவர் ராஜேந்திரராவ், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம், ராமன், முகைதீன்அப்துல்காதர், செந்தில்ஆறுமுகம், லிவிங்ஸ்டன் சாமுவேல் ஆகியோர், செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி இயக்கவேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் கழிப்பறையில் முறையான செப்டிக்டேங்க் இல்லை என்றனர்.  நாகை-வேளாங்கண்ணி தினசரி ரயிலை இயக்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் ஏடிஎம் வசதி வேண்டும். செங்கோட்டை ரயில் நிலைய மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென்றார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரை தனுஷ்குமார் எம்.பி. பார்வையிட்டார். அப்போது கூடுதலாக கவுன்டர்கள் அமைக்க வேண்டும். அங்குள்ள பழுதடைந்துள்ள பர்னிச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், அப்துல்கனி, பால்ராஜ், நடராஜன், சேக்பரீத், மோகன்ராஜ், மைதீன்பிச்சை, மீனாட்சிசுந்தரம், இசக்கித்துரை, ராம்ராஜ், முருகன், வடகரை ராமர், ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்ககேற்றனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி