ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் வள்ளியூரை புறக்கணிக்கும் திருச்செந்தூர், தூத்துக்குடி அரசு பஸ்கள்

வள்ளியூர், ஜூலை 24: ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் வள்ளியூர் பஸ் நிலையத்தை புறக்கணிக்கின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

வள்ளியூரில் ரயில்வே கேட் அடைக்கும் போது இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து ெநரிசலை குறைப்பதற்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் தெற்குவள்ளியூர் வழியாக இயக்கப்படுகிறது.  ஆனால் இரவு நேரங்களில் அந்த பஸ்கள் வள்ளியூருக்கு வராமல் பணகுடி வழியாக செல்லுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் நாகர்கோவிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லைக்கு செல்லும் பஸ்கள் வள்ளியூரை புறக்கணித்துவிட்டு புறவழிச்சாலையில் செல்கின்றன என பொதுமக்கள், வியாபாரிகள் நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இது குறித்து தெரிவித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.எனவே பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் நலன் கருதி வள்ளியூரை புறக்கணிக்கும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 இதுகுறித்து தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவர் ஜோசப்பெல்சி கூறுகையில்    தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை மார்த்தாண்டம் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேரூந்துகள் இரவு 7 மணிக்கு மேல் வள்ளியூர் வராமல் பணகுடி வழியாக சென்று விடுகின்றன. ரம் பகுதியிலிருந்து வள்ளியூருக்கு செல்லும் பயணிகளிடம் நடத்துனரும் ஓட்டுனரும் பேருந்து வள்ளியூர் செல்லாது எனகூறி பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் வள்ளியூர் ரயில் நிலையம் செல்லும் பயணிகளும் நெல்லை, மதுரை செல்ல வேண்டிய பயணிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு  இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இரவு எந்த நேரமானாலும் வள்ளியூர் பேரூந்து நிலையம் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

Related Stories: