தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவு ஏற்றுமதியாளர் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி  மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ் நாடு மீன் வளத்துறை மற்றும்  கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆணையம்  சார்பில் கடல் உணவு  ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

 இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 14 கடல் உணவு பதப்படுத்தும்  தொழிற்சாலைகளில் இருந்து 16 பேர் பங்கேற்றனர். மீன்வளக் கல்லூரி முதல்வர்  வேலாயுதம் வாழ்த்திப் பேசினார். உதவிப்  பேராசிரியர் கணேசன்,

மீன் தர உறுதிபாடு மற்றும் மேலாண்மைத்துறை தலைவர் மற்றும்  பேராசிரியர் ஜெய ஷகிலா பேசினர். மீன்வளத் துறை இணை இயக்குநர் சந்திரா வரவேற்றார். கடல் பொருள் மற்றும் முன்னேற்ற ஆணைய உதவி இயக்குநர் அஞ்சு,  ஏற்றுமதியாளர்களிடம் கடலுணவு ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கு தேவையான  வசதிகள் குறித்து கலந்தாலோசித்தார்.கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதியாளர்கள், மீன்பிடி  துறைமுகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்துமாறும், பனிக்கட்டி, பெட்டி  சேமிப்பதற்கான அறையும் மீன் இறங்குதளைங்களில் நண்டுகளை சமைப்பதற்கான  வசதியும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். தூத்துக்குடி மீன்பிடி  துறைமுகம் மீன்துறை உதவி இயக்குநர் அன்டோ பிரின்சி வயலா நன்றி கூறினார்.

Related Stories: