×

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
 தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி அணிகள் 54, 56 சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் முகாம், செஞ்சுருள் சங்கத் துவக்க விழா மற்றும் சிறப்பு முகாமில் 7 நாட்களும் பங்கேற்ற 100 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைதலைவர் காசிராஜன் வாழ்த்திப் பேசினார்.  என்எஸ்எஸ் அலுவலர் தேவராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்புபிரிவு அலகின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமலவளன் மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வு பயிற்சி மைய முதல்வர் ஸ்டெல்லா, சிறப்புமுகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.  நாட்டு நலப்பணித் திட்டஅலுவலர் பொன்னுத்தாய் நன்றிகூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு