×

கல்யாண ரங்கநாத பெருமாள் கோயில் குளத்தையொட்டி பாதுகாப்பற்ற நிலையில் அமைந்துள்ள குடிநீர் கிணறு: ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர், ஜூலை 24: கொளத்தூர் கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோயில் குளத்தையொட்டி, பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இதனை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொளத்தூர் ஊராட்சியில் கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோயில் குளத்தையொட்டி கடந்த 1997ம் ஆண்டு கிணறு தோண்டப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கிணற்றின் பாதுகாப்பு கருதியும், கழிவுபொருட்கள் குடிநீரில் கலக்காமல் இருக்கவும், அப்போதே கிணற்றுக்கு கான்கிரீட் மூடி அமைக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் கான்கிரீட் மூடிகள் உடைந்து விட்டன.மேலும் மின் மோட்டார் பழுது பார்ப்பதற்காக சில மூடிகள் அகற்றப்பட்டன. இதனால் கிணற்றின் பெரும்பகுதி தற்போது திறந்த நிலையில் பாதுகாப்பற்று காணப்படுகிறது. இதுபோல் உடைந்த கான்கிரீட் மூடிகள் மீது நின்றபடி பொதுமக்கள் ஆபத்தான முறையில் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.

கொளத்தூர் ஊராட்சியில் போதுமான வருவாய் ஆதாரம் இல்லாததால், கிணற்றுக்கு புதிய கான்கிரீட் மூடி அமைக்க முடியாத நிலை உள்ளது.எனவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கொளத்தூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு கான்கிரீட் மூடி அமைத்து தர வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொளத்தூர் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...