இருட்டினை பயன்படுத்தி கட்டி வைத்த ஆடு திருட்டு: மர்மநபர்களுக்கு வலை

உத்திரமேரூர், ஜூலை 24: தெரு விளக்கு எரியாததை பயன்படுத்தி, கட்டி வைத்த ஆட்டை, நள்ளிரவில் மர்மநபர்கள் திருடி சென்றனர்.உத்திரமேரூர் அடுத்த சிறுங்கோழி கிராமத்தில் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராமன் (58). விவசாயி. இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக ராமன் வசிக்கும் தெருவில், தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடந்து செல்லும்போது, சாலையில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்குமோ என்ற பயத்தில் கடந்து செல்கின்றனர். இதுபற்றி சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு, அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. அதை கேட்டு ராமன் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தனர். அதற்குள் மர்மநபர்கள், ஆட்டை திருடி கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராமன், உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED 3 மாதமாக தெருவிளக்குகள் எரியாததால்...