அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் தினமும் தரிசிக்கின்றனர்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

காஞ்சிபுரம், ஜூலை 24: அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் தினமும்  தரிசிக்கின்றனர் என அமைச்சர் கடம்பூர் ராஜு  கூறினார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23 நாட்களில் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆதி அத்திவரதரை பொதுமக்கள் லட்சக்கணக்கில் தரிசனம் செய்கின்றனர் மேலும் பலர் முடியாத நிலையில் தரிசனம் கிடைக்குமா என ஏங்கி வந்த நிலையில் காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் தற்போது வரை சிறப்பாக அவர்களுக்கு நேரில் பார்க்கும் வண்ணம் செய்திகளை ஒளிப்பரப்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அனைத்து ஊடக துறைகளுக்கும் செய்தி விளம்பரத்துறை மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, அதன் மூலம் பொது மக்கள் ரசிக்கும் வண்ணம் செய்யப்படுகிறதுமேலும் அரசு சார்பில் பொருட்காட்சி 48 நாட்கள் நடத்தபட்டு, அனைத்து அரசுத்துறை திட்டங்களும் அதில் இடம்பெறும் வகையில் நடக்கிறது என்றார்.அமைச்சருடன் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில்...