கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு சிக்கல்

ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த திருவிழாவின் போது நான்கு மாடவீதிகளிலும் தேரோட்டம் நடக்கும். தற்போது பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்தாலும், இப்பணிகள் முடிய 1 ஆண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த 6 மாதத்தில் நடைபெற உள்ள தேரோட்டத்தின்போது சாலைகள் இவ்வாறு பள்ளம், மேடாக காணப்பட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஜனவரி மாதத்துக்கு நான்கு மாடவீதிகளிலும் பாதாள சாக்கடைப் பணிகளை விரைந்து முடித்து புதிய சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்