×

பள்ளிப்பட்டு அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்: திரும்பி சென்ற அதிமுக எம்எல்ஏ

பள்ளிப்பட்டு, ஜூலை 23 : கொடி வலசா ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதட்டூர்பேட்டை-அத்திமஞ்சேரி கூட்டு  சாலையில்  100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் திடீர்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த கொடிவலசா ஊராட்சியில் பாரதி தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து, பொதட்டூர்பேட்டை-அத்திமஞ்சேரி கூட்டு சாலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். சாலையின் குறுக்கே காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஊராட்சி செயலர் பூபதி விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்னைக்கு முறையான நடவடிக்கை எடுத்து விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என  உறுதி கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதுஅதேபோன்று ஆர்.கே.பேட்டை அடுத்த வெடியங்காடு ஊராட்சியில் மேட்டுத்தெரு, வடமலைத்தெரு, கீழ்த்தெரு உள்ளிட்ட தெருக்களில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், ஒன்றிய நிர்வாகத்திடமும் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.இந்நிலையில் நேற்று வெடியங்காடு அரசு மேனிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி நேற்று எம்.எல்.ஏ. வந்து வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மேலே குறிப்பிட்ட பகுதி மக்கள் வெடியங்காடு சக்தியம்மன் கோயில் அருகே காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலவச மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் பழனிசேகர் வந்த வாகனத்தை பொதுமக்கள் விடாததால் திரும்பிச் சென்றார். இந்த தகவல் எம்.எல்.ஏ.நரசிம்மனுக்கு தெரிந்ததால் விழாவிற்கு வரவில்லை. அதன்பிறகு தலைமையாசியர் மடிக்கணினி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆர்.கே.பேட்டை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு ஒருமணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...