×

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்: அனைத்து அமைப்பினர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூலை 23: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தும்போது அனைத்து அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பொன்னையாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, துணைத் தலைவர் பாஸ்கர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை நிறைவேற்ற பல்வேறு வகையில் முயற்சி செய்கிறது.இதையொட்டி, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை மீது கருத்து கேட்க கூட்டம் நடத்தும்போது, பொதுமக்கள், ஊடகங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து கட்சிகளுக்கும் தகவல் தெரிவித்து நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...