×

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்யூர், ஜூலை 23: சித்தாமூரில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரின் போக்கை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் தாமஸ் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், சேம நலநிதி, முறையான ஓய்வூதியம் வழங்காதது, பணி ஓய்வு உத்தரவு, தேக்க நிலை ஊதியம்,  பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவைகள் வழங்காததை கண்டித்து கோஷமிட்டனர். சங்க நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் காமராஜ், மாவட்ட துணை தலைவர் தேவி உள்பட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...