×

காமராஜர் பிறந்த நாள்விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

சிவகாசி, ஜூலை 23: சிவகாசியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் கல்விக்காக அதிகமாக நிதி ஒதுக்கி, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையால் கல்வித்துறை சிறந்து விளங்குகிறது. ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க, தமிழக அரசு இலவச பஸ்பாஸ், சீருடைகள், நோட்புக், லேப்டாப், சைக்கிள் உட்பட 16 வகையான பொருட்களை வழங்கி வருகிறது.இலவச சைக்கிள் மூலம் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவியர்களும் மேல்படிப்பை படித்து வருகின்றனர். ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.தமிழக அரசுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் முரளிதரன், சோனி விக்னேஷ்குமார், மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன் மற்றும் நி்ர்வாகிகள் ராஜபாண்டியன், பாஸ்கரன், காளிராஜன், அதிமுக நகர செயலாளர்கள் பொன்சக்திவேல், அசன்பதூரூதீன், ஒன்றியச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...