தொடரும் கனமழையால் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நிலச்சரிவு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை

சின்னமனூர் , ஜூலை 23:  சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் பெய்து வரும் கனமழையால் மரங்கள் ஒடிந்து வேறோடு விழுவதாலும், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும்  சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் உள்பட 7 மலைக்கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தேயிலை ஏலக்காய், காப்பி, மிளகு விவசாயம் நடந்து வருகிறது. மேகமலை உயிரின வனச்சரணாலயமாக திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும்  இப்பகுதி 2008ம்  சுற்றுலாத் தலமாக அரசு அறிவித்ததுடன் நான்கு ஆண்டுகள் கோடை விழாவும் நடத்தப்பட்டது.ஹைவேவிஸ் மலைச்சாலையில் 45 கி.மீ தூரம் குண்டும், குழியுமாக தடுப்பு வேலி மற்றும் பாலங்கள் உடைந்து பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனால் 35க்கும் மேற்பட்ட உயிர்க பலி ஏற்பட்டுள்ளது. இதனால் மலைச்சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக  ரூ.80.86 கோடி நிதியில் 35 கி.மீ தூரம் சாலை விரிவாக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இதன் காரணமாக தற்போது சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹைவேவிஸில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளையும், ஐந்து அணைகளையும், ஏரிகளையும், தேயிலை தோட்டங்களின் இயற்கை அழகையும் ரசிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து  வருகின்றனர் -தற்போது கேரளாவின் தேக்கடி மலைவரிசையில் ஹைவேவிஸ் மலையும் இணைந்திருப்பதால் இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஓங்கி சுழற்றியடிக்கும் சூறைக்காற்றால் மரங்களும் வேரோடு சாய்ந்து வருகின்றன.இதனால் இச்சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதால் இப்பகுதியில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  தேனி எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின், இதுகுறித்த அறிவிப்பை ஹைவேவிஸ் போசார் பிளக்ஸ் போர்டாக வைத்துள்ளனர். ஆனாலும், 7 மலைக்கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக வழக்கம் போல் 2 அரசு பஸ் உட்பட 3 பஸ்கள் எச்சரிக்கையுடன்  இயக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்  ஹைவேவில், தூவானம் ,மணலாறு, வெண்ணியாறு, இரவ கல்லாறு உள்பட அணைகளும், ஏரிகளும் நிரம்பி வருகின்றன. நிலச்சரிவு மற்றும் மரம்விழுந்த பகுதிகளில் போலீசார் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: