சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 5 லட்சம்

சிங்கம்புணரி , ஜூலை 23: சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா முடிவடைந்ததையொட்டி நேற்று உதவி ஆணையர் கருணாகரன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணினர். இதில் ரொக்கப் பணம் 5 லட்சத்து 16 ஆயிரம்,  தங்கம் 8 கிராம் காணிக்கையாக பெறப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, அறநிலையத்துறை ஆய்வாளர் பிச்சைமணி, தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED காரைக்குடி பகுதியில் போலி பட்டாவில் நில மோசடி மோசடி மன்னர்கள் கைவரிசை