துணைவேந்தர் தகவல் புதிய கட்டிட திறப்பு விழா

சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.52.80லட்சம் மதிப்பீட்டில் ஏழு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. தமறாக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்,  பில்லூர், பொன்னாங்குளத்தில் நிழற்குடை, டி.புதூரில் நாடக மேடை,  இலந்தங்குடிப்பட்டி, வில்லிபட்டியில் அங்கன்வாடி மையம், கன்னிமார்பட்டியில் நியாயவிலைக்கடை உள்ளிட்ட ஏழு கட்டிடங்களை அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, சிவகங்கை தாசில்தார் கண்ணன், உதவிப் பொறியாளர் ராஜா, சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காப்பீட்டுத் திட்டத்தில் வேண்டா,...