×

சந்தையூரில் உள்ள தீண்டாமை சுவரை இடித்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் ஆதித்தமிழர் கட்சியினர் வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 23:  சந்தையூரில் உள்ள தீண்டாமை சுவரை முழுவதுமாக இடித்து, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆதித்தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.    மதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் கட்சி ெசயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ராஜசேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘பேரையூர் தாலுகா சந்தையூர் இந்திரா காலனியில் ஆதிதிராவிடர்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே தீண்டாமை சுவர் கட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பகுதியினரின் 67 நாட்கள் போராட்டத்திற்கு பின் சுவற்றின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதை எதிர்த்து, மற்றொரு தரப்பினர் நீதிமன்றம் சென்றனர். தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உண்மைக்கு மாறன தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது அமைதி திரும்பியதாகவும், ஒரு தரப்பினருக்கு சுவர் உள்ள பகுதியை வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இதை வண்மையாக கண்டிக்கிறோம். சுவர் உள்ள பகுதியை இரண்டு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுவரை முழுவதுமாக இடித்துவிட்டு, அந்த இடத்தில் சமுதாயக்கூடம் அல்லது அங்கன்வாடி மையம் கட்டலாம் என முன்னாள் கலெக்டர் வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்ற வேண்டும். தற்போதுள்ள உண்மை தன்மையை தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.   மனுவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...