×

பழைய பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பூர், ஜூலை23:
திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் பிரபுதேவா (25). இவர் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (42) இவர் திருப்பூர் தனியார் மினிபஸ் ஓட்டுனராக உள்ளார். இவர்கள் இருவரும் முருகம்பாளையம் பகுதியில் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலுள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில்போதை அதிகமானதால் திருப்பூர்  அவிநாசி செல்லும் மாநகர பஸ்கள் நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில் நிலைகுலைந்த நிலையில் இருந்துள்ளனர். அப்போது, பிரபுதேவாவிற்கு போதை அதிகமானதால் அதே இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது கண்ணன் பிரபுதேவாவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணம், மற்றும் பீடி கட்டை திருடியுள்ளார். இதனை பார்த்த பேருந்திற்கு காத்திருந்த பொதுமக்கள் கண்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் விசாரணை செய்வதற்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெறுகிறது. பழைய பஸ் நிலையம் அருகே 3 டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடக்கிறது. இதனால் அந்த கடையில் மது குடிப்பவர்கள் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து போதையில் இங்கு பேருந்துக்கு காத்திருக்கும் பெண்களிடம் சில்மிஷம் மற்றும் பிக்பாக்கெட் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த பிட்பாக்கெட் திருடனை பொதுமக்கள் பிடித்து சுமார் 40 நிமிடங்கள் கழித்தே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவ்வாறு கூறினார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்