×

ஒடிசா தொழிலாளர்கள் சேவை மையத்தில் அளிக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும்

திருப்பூர், ஜூலை 23: திருப்பூரில் பணியாற்றி வரும் ஒடிசா மாநில தொழிலாளர்கள், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பிரச்னை இருந்தால் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம் என திறன் மேம்பாட்டுத் துறை அதிகாரி கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தினமும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளிலிருந்து வேலை தேடி வருகிறார்கள். குறிப்பாக ஒடிசாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கவும் உதவி செய்யவும் ஒடிசா அரசு சார்பில்  புலம்பெயர்ந்து வரும் ஒடிசா தொழிலாளர்களுக்கான சேவை மையம் திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள ராக்கியாபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் சார்பில் ஒடிசா தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் சேவை மையத்தில் ஒடிசா அரசு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் ஒடிசா தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதற்கு சேவை மைய மேலாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஒடிசாவை சேர்ந்த திறன் மேம்பாட்டு துறை அதிகாரி சஞ்சய் குமார் திரிவேதி பங்கேற்று பேசியதாவது:ஒடிசா பணியாளர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் உள்ளது. பணிபுரியும் நிறுவனங்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் சேவை நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர்கள் வேலை செய்வதற்கான அனைத்து உதவிகளும் சேவை மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார். பின்னர் நீண்ட நாட்களில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா