3,926 மாணவர்களுக்கு லேப்டாப்

சென்னை: தமிழக அரசின் சார்பில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் விழா, போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு 1,906 லேப்டாப்களும்,  திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2,020 லேப்டாப்களும் என மொத்தம் 3,926 மாணவர்களுக்கு லேப்டாப்களை,  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அவர் பேசுகையில், ‘‘தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பாடத்திட்டங்கள், சீருடை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செப்டம்பரில் அமைக்கப்படும்.  மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி கல்வி பயிற்றுவிக் கப்படுகிறது. கல்விக்காக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: