×

ஒரு ஆண்டாக அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லை மாணவர்கள் பாதிப்பு

பந்தலூர், ஜூலை 23: பந்தலூர் அருகே குந்தலாடி அரசு பள்ளிக்கு கடந்த ஒரு ஆண்டாக தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வகுப்பு எடுக்கப்படுகிறது.  இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் மிகவும் பாதித்துள்ளனர். தற்போது பணியில் இருக்கும் 5  ஆசிரியர்களில் ஒருவர் தலைமை ஆசிரியர் பொறுப்பை கவனித்து வருவதால், மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நெருங்கும் வேலையில் மாணவர்களின் நலன் கருதி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி