×

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 27ம் தேதி நடக்கிறது

ஊட்டி, ஜூலை 23:  கோத்தகிரியில் வரும் 27ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் ஆகியவை சார்பில் வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோத்தகிரியில் உள்ள கே.பி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 10ம் வகுப்பு தேறிய, தவறிய, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., (அனைத்து தொழிற்பிரிவு), பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை படித்த வேலை வாய்ப்பற்ற பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம். இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் விவரங்களுக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 0423-2444004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி