×

ரூ.2.68 கோடி மதிப்பில் 2190 விலையில்லா மடிக்கணினி

கோவை, ஜூலை 23: கோவை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவ, மணவியர்களுக்கு  ரூ.2.68 கோடி மதிப்பிலான 2190 விலையில்லா மடிக்கணினிகளை  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.கோவை மாவட்டம் தொண்டமுத்தூர், சென்னனூர், ஆலாந்துறை, மத்வராயபுரம், குளத்துப்பாளையம், சுண்டாக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2190 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.68 கோடி மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை நேற்று   அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பள்ளிக்குழந்தைகளுக்கு விலையில்லா மடிகணினி, பாடபுத்தகம், விலையில்லா சைக்கிள் போன்ற 14 வகையான சலுகைகளை வழங்கி மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பள்ளிகளில் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கணினி அறிவை போதிக்கும் தனிசிறப்பு வாய்ந்த திட்டமான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமானது ஏழை குடும்பங்களிலுள்ள மாணாக்கர்களுக்கு உயர்கல்வி அடைய உதவும் உன்னத நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டு உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 இவ்வாறு வேலுமணி பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் நகை வியாபாரியிடம்
போலீசாக நடித்து ரூ.13 லட்சம் பறிப்பு
கோவை, ஜூலை 23: கோவையில் போலீஸ் போல் நடித்து 13  லட்ச ரூபாய் பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் நவுசாத் (40). நகை வியாபாரி. இவர் நண்பர் அபினேஷ் (30). நவுசாத் பல்வேறு இடங்களில் நகை வாங்கி விற்பனை செய்து வந்தார். கோவையில் ஜலீல் என்பவர் குறைந்த விலைக்கு நகை வாங்கி தருகிறார். கோவை சென்றால் நகை வாங்கலாம் என நவுசாத்திடம், அபினேஷ் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நவுசாத்தும், அபினேசும் காரில் கடந்த 17ம் தேதி 13 லட்ச ரூபாயுடன் கோவைக்கு வந்தனர். முன்னதாக ேகாவைக்கு நகை வாங்க வரும் தகவலை ஜலீலிடம் கூறியிருந்தனர். இருவரையும் ஜலீல் சாயிபாபாகாலனியில் ரோட்டோரம் காத்திருக்குமாறும், தான் வந்து அழைத்து செல்வதாகவும் செல்போனில் தகவல் தெரிவித்திருந்தார். நவுசாத்தும், அபினேசும் காரில் காத்திருந்த ேபாது 2 கார் வந்து நின்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்த ஒரு நபர் மற்றும் ‘விஜிலென்ஸ் போலீஸ்’  எனக்கூறிய 5 பேர், ‘‘ உங்களிடம் விசாரணை நடத்தவேண்டும் போலீஸ் ஸ்டேஷன் வாருங்கள், விசாரணைக்கு பின் உங்களிடம் உள்ள பணத்தை ஒப்படைப்போம், அதுவரை நீங்கள் எங்களுடன் தான் இருக்கவேண்டும், ’’ எனக்கூறினர்.

இதை ெதாடர்ந்து நவுசாத், அபினேஷ் ஆகியோர் தாங்கள் வந்த காரை அப்படியே நிறுத்தி விட்டு போலீஸ் எனக்கூறிய கும்பலுடன் காரில் ஏறி சென்றனர். சிறிது தூரம் சென்ற அந்த கும்பல் இருவரையும் மிரட்டி இறக்கி விட்டு பணத்துடன் தப்பியது. இது தொடர்பாக நவுசாத் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மதுக்கரையில் பதுங்கியிருந்த பாலக்காடு ஆலத்தூர் பகுதியை சேர்ந்த போலி போலீஸ் கும்பல் தலைவர் ஜலீல் (39) என்பவரையும், அவரது கூட்டாளிகளான திருச்சூரை சேர்ந்த அஜித் (26), அரவிந்தன் (43), ரத்தினபுரியை சேர்ந்த பத்மநாபன் (50), கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (45), துடியலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் (60) ஆகியோரை கைது செய்தனர். இந்த கும்பலை சேர்ந்த மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலி போலீஸ் கும்பல் பயன்படுத்திய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான இரு கார் மற்றும் ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள ெதாகையை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கைதான கும்பல் தலைவர் ஜலீல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ கேரளாவை சேர்ந்த சிலர் கோவைக்கு வந்து குறைந்த விலையில் நகை வாங்கி செல்கின்றனர். நகை வாங்கி விற்கும் ஏஜன்ட் என சொல்லி சிலரிடம் நட்பு ஏற்படுத்தி கொண்டேன். என்ைன அபினேஷ் தொடர்பு கொண்டு நகை வாங்கி தருமாறு கேட்டார். நான் குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி ேகாவைக்கு பணத்துடன் வருமாறு அழைத்தேன். அவர் நவுசாத்துடன் நகை வாங்க வந்த விபரம் அறிந்து எனது கூட்டாளிகளை அனுப்பி பணத்தை பறித்தேன். போலீஸ் எனக்கூறினால் பயந்து போய் புகார் தர மாட்டார்கள் என திட்டமிட்டேன். ஆனால் நவுசாத் போலீசில் புகார் கூறி எனது செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை கூறி சிக்க வைத்து விட்டார், ’’ என்றார்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை