×

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 23: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என எஸ்டிபிஐ வலியுறுத்தி உள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அருகில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இதுதவிர, 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மதுக்கடையில் பார் வசதி இல்லாததால் குடிமகன்கள் வீட்டு வாசல் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முன்பு அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், மக்களுக்கு இடையூறாக குறிப்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை இருந்து வருகிறது.போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது. இக்கட்சியின் ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி அப்துல்ரகுமான் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்தனர்.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...