தொழில் முனைவோருக்கு இலவச பயிற்சி

ஈரோடு, ஜூலை 23: ஈரோடு வேளாண் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை சங்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோருக்கு 2 மாதம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான ஐதராபாத் மேனேஜ் என்ற நிறுவனம் இந்த பயிற்சியை நடத்த அனுமதியும், நிதியும் வழங்கி உள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல், பட்டுவளர்ச்சி, உணவியல், உயிரியல் பட்டத்தோடு வேளாண் பட்டயம், முதுநிலை வேளாண் பட்டயப்படிப்பு, விலங்கியல், தாவரவியல், வேளாண் முதுநிலை பட்டயப்படிப்பு, வேளாண் பாடத்திட்டத்தில் இண்டர் மீடியேட் படிப்பு, சுற்றுச்சூழல் கல்வி போன்றவற்றில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் இந்த பயிற்சியை பெறலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் சொந்தமாக தொழில் துவங்க வங்கி கடன், மானியமும் பெற வாய்ப்புள்ளது. இதில், சேர விருப்பமுள்ளவர்கள் ஈரோடு அருகே திண்டல்மேடு வித்யாநகரில் உள்ள வேளாண் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை சங்கத்தை அணுகலாம். பயிற்சியில் சேர ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: