×

காடையாம்பட்டியில் தண்ணீர் விற்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சேலம், ஜூலை 23:  ேசலத்ைத அடுத்த காடையாம்பட்டியில் தனிநபர், போர்வெல் போட்டு தண்ணீர் விற்பதை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை ைவத்துள்ளனர். சேலத்தை அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக போர்வெல் தண்ணீரை விற்பதாக புகார் மனு அளித்தனர். இது குறித்து கிராமமக்கள் கூறியதாவது: காடையாம்பட்டியை அடுத்த ராமமூர்த்தி நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் விவசாய நிலங்கள் தான் அதிகளவில் உள்ளது. குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பாக்கு உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கடும் வறட்சி நிலவுவதால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எங்கள் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது நிலத்தில் போர்வெல் போட்டு, தினசரி லட்சக்கணக்கான தண்ணீரை உறிஞ்சி எடுத்து சட்டவிரோதமாக  விற்பனை செய்து வருகிறார். காலை 5 மணி முதல் 10 மணி வரை மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதால், எங்கள் கிணறுகளிலும், போர்வெல்களிலும், தண்ணீர் வற்றி விட்டது. இதனால் எங்கள் அன்றாட தேவைக்கு தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு