குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஜூலை 23:சேலம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கிழக்குராஜாபாளையம் கிராமத்தில் சுமார் 3ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், தேவையான குடிநீர் கிடைக்காததால் கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கிடைக்கின்ற தண்ணீரில் உப்பின் தன்மை அதிகமாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட யெசயலாளர் ராமமூரத்தி, மாவட்ட செயற்குழு வெங்கடாஜலம், குணசேகரன், ஆத்தூர் தாலுக்கா செயலாளர் முருகேசன் மற்றும் கட்சியினர், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த 2ஆண்டுகளில் மட்டும் உப்பு குடிநீர் குடித்து 24 வயது முதல் 40 வயது வரை உள்ள 39 பேர் உயிரிழந்துள்ளனர், 26 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டாயலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் எடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். ேமலும் இந்த பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர்-ஆத்தூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: