×

ராசிபுரத்தில் 821 மூட்டை பருத்தி ₹20 லட்சத்திற்கு ஏலம்

ராசிபுரம், ஜூலை 23: ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று, 821 மூட்டை பருத்தி ₹20 லட்சத்துக்கு விற்பனையானது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அக்கரைப்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், சிங்களாந்தபுரம், சீராப்பள்ளி, மெட்டாலா சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மொத்தம் 821 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.  இந்த பருத்தியை வாங்க நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,809 முதல் ₹6,762 வரை ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 821 மூட்டை பருத்தி, ₹20 லட்சத்துக்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்