×

ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் நியமனம்

ஓசூர், ஜூலை 23:  சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தகவல் தொழில் நுட்ப துறை மானிய கோரிக்கை விவாதத்தில், ஓசூர் தொகுதி திமுக எம்எல்ஏ சத்யா பேசும்போது, ஓசூர் இஎஸ்ஐ ம மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, போதிய வசதிகளை ஏற்படுத்தி, கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், இஎஸ்ஐ மருத்துவமனையை மருத்துவக்கல்லூரியாக மாற்ற முன்வர வேண்டும் கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து தற்போது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தோல்நோய் சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர்,இரண்டு மயக்கவியல் மருத்துவர்கள் ஆவார்கள். மருத்துவமனைக்கு தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு