×

காவேரிப்பட்டணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆட்டோ வசதி

காவேரிப்பட்டணம்,  ஜூலை 23: காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேர்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆட்டோ வசதி தொடக்க விழா நடைபெற்றது. காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேர்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், எவ்வித கட்டணமும் செலுத்தாமல்  இலவசமாக பள்ளிக்கு சென்று வர ஆட்டோ வசதி, ஆசிரியர்கள் பங்களிப்புடன்  ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. காவேரிப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கிருஷ்ணதேஜஸ்   மற்றும் செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, ‘ஆட்டோவில் பாதுகாப்பாக பயணம்  செய்வது எப்படி’ என்பதைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.விழால், காவேரிப்பட்டணம் ஒன்றிய வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் (பொ) அம்பிகேஸ்வரி, சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார். பள்ளியின் முன்னாள் மாணர்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் கல்வியாளர்கள், மேலாண்மை குழு தலைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்வி அலுவலர்களும், ஊர் பெரியோர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு டை, பெல்ட் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்