×

போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் துவங்கியது

காவேரிப்பட்டணம், ஜூலை 23: போச்சம்பள்ளியில், கொப்பரை கொள்முதல் துவக்க விழா மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.போச்சம்பள்ளியில், கொப்பரை கொள்முதல் துவக்க விழா மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண்மை விற்பனை, வணிகத் துறை தர்மபுரி விற்பனைக்குழு துறை மூலம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று மத்திய அரசின் விலை ஆதார திட்டம், வேளாண் வணிக துறை சார்பாக நடைபெற்றது. விழாவில் வேளாண்மை துணை இயக்குனர் பிரதிப் குமார் சிங், துணை இயக்குனர் கண்ணன், மத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு, விவசாயிகளுக்கு கொப்பரை கொள்முதல் தயார் செய்ய தேவையான தொழில் நுட்ப பயிற்சி நேரடியாக செய்து காட்டப்பட்டது. முகாமில் 200 விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதற்கான  ஏற்பாடுகளை, வேளாண் அலுவலர் கயிலை மன்னன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் தமிழக விவசாய  சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் மற்றும் மா உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் சிற்றரசு, செந்தில், சண்முகம், புலவர் கிருஷ்ணன், நக்கீரன் மற்றும் அனைத்து விவசாயிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு கொப்பரை தரம் பிரித்தல் மற்றும் கொள்முதல் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டனர். நேற்று 6 விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. 6 மாத காலத்திற்கு போச்சம்பள்ளி மற்றும் ஒசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரையை நேரடி கொள்முதல் செய்யப்படும். பந்து கொப்பரை கிலோ ₹99.20க்கும், அரவை கொப்பரை கிலோ ₹95.21க்கும் கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தை பற்றி விவரங்கள் அறிய, அருகிலுள்ள வேளாண் விவாக்க  மையம் மற்றும் வேளாண் வணிக கள பணியாளர்களை  தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்