×

ஓசூரில் பெரியார் நூல் அறிமுக விழா

ஓசூர், ஜூலை 23: ஓசூரில் மாவட்ட தி.க. சார்பில், ஈ.வெ.ரா-மணியம்மையார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில், “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் நூல்” அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு தி.க. மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ப.க. வட்ட செயலாளர் சிவந்தி அருணாச்சலம் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ வெங்கடராமரெட்டி நூலை வெளியிட, ஓசூர் நகரமன்ற முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பெரியார்-மணியம்மை, ஓசூர் நகர செயலாளர் செல்லதுரை ஆகியோரது படங்கள் திறந்து வைக்கப்பட்டது. காளிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடசாமி,  ஒன்றிய செயலாளர் சின்ன பில்லப்பா, நகர அவைத் தலைவர் கருணாநிதி, ரவிச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் கிருஷ்ணன், துணை செயலாளர் ராஜகோபால், காங்கிரஸ் நகர தலைவர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். தி.க மாநில அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் விடுதலை தமிழ்ச்செல்வன், மாநில ப.க. துணைத்தலைவர் அண்ணா சரவணன், ஓசூர் நகர தலைவர் மணி, செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது