×

மருத்துவ கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கடத்தூர், ஜூலை 23: கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைந்து, பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடத்தூரை சுற்றியுள்ள தேக்கல்நாயக்கன்பட்டி, வெ.புதூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, ராணி மூக்கனூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிகிச்சை பெற்றுச் செல்லுகின்றனர். இந்நிலையில் கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகம் எதிரே உள்ள பகுதியில், குப்பைகள், மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கவர்கள் அதிகமாக கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு, மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடத்தூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை பழைய குவாட்டர்ஸ் அருகே கொட்டி எரிகின்றனர். இதனால் கரும் புகை ஏற்பட்டு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், காற்று மாசடைவதோடு, மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. எனவே, மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா