×

ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நூதன விழிப்புணர்வு பிரசாரம்

திருச்சி, ஜூலை 23: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ரயிலில், ரயில் நடைமேடைகளில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களையோ அல்லது சிறுமிகளையோ தனியாக பார்த்தால் உடனடியாக சைல்டுலைன் 1098 அல்லது ஆர்பிஎப் ஹெல்ப்லைன் 182 அல்லது ஜிஆர்பி 1512 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்களை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைக்கலாம். இல்லையென்றால் அவர்கள் தீய சக்திகளிடம் மாட்டிக்கொள்ள நேரிடுவார்கள். அறிமுகமில்லாத சக பயணிகள் தரும் உணவு பொருட்களையோ அல்லது குளிர்பானங்களையோ வாங்கி அருந்தாதீர்கள். அதில் மயக்கமருந்து கலந்திருக்கக்கூடும். இதனால் உங்கள் உடமைகளை நீங்கள் இழக்க நேரிடும். ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் அதிகமான நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்ய வேண்டாம். மற்றும் நகைகள் வெளியில் தெரியும்படி அமரவேண்டாம். படிக்கட்டில் நின்று பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தான செயலாகும். அது ரயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை மறக்க வேண்டாம் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். மேலும் தப்புகொட்டி விழிப்புணர்வு நாடகம் நடித்துக் காட்டினர்.



Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு