×

கலெக்டர் அலுவலக பணிகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

திருச்சி, ஜூலை 23: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19 பேருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.78,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 229 மனுக்கள் உள்பட 658 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் சமூக பணித்துறை படிக்கும் மாணவிகள் 20க்கும் மேற்பட்டவர் கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாணவிகள் குறைதீர் கூட்டம் எப்படி நடக்கிறது? அதிகாரிகள் மக்களை எப்படி நடத்துகின்றனர்? மனுக்கள் மீது என்ன மாதிரி தீர்வுகள் தரப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டு கள நிலவரங்களை தெரிந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ