பட்ஜெட் குறித்து ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஜூலை 23: திருச்சி தனியார் கல்லூரியில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம்

திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் பொருளியல் மன்ற துவக்கவிழா மற்றும் மத்திய பட்ெஜட் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் செயலாளர் மற்றும் தாளாளர் காஜாநஜிமுதீன்சாகிப் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், பொருளாளர் ஜமால்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆடிட்டர் ஜவகர்அலி மத்திய அரசின் பட்ஜெட் புதிய தொழில் தொடங்குவோர், தொழிலை விரிவாக்கம் செய்வோருக்கு ஏற்றதாக இருக்கிறது. அதேபோல் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது, ஜிஎஸ்டி வரியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கலாம் என தெரிவித்தார். இதில் பொருளியல்துறை துணை தலைவர் ராஜாமுகமது நன்றி கூறினார்.

Related Stories: