விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சங்கராபுரம், ஜூலை 23: சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகள் மகாலட்சுமி(19). பிளஸ்2 படித்துள்ள இவர் கல்லூரிக்கு விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது தாய் ரோஸ்பிரியா வயல்வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மகாலட்சுமி வீட்டு வேலை செய்யாமல் இருப்பதை கண்டு திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு தெளிக்க வைத்திருந்த குருணை மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்ேபரில் சங்கராபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: