வாலிபர் மர்ம சாவு: 3 பேரிடம் தீவிர விசாரணை

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தமுருகேசன் மகன் மாவீரன் என்பவர் நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் உள்ள தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டில் தலையில் படுகாயத்துடன் பரிதாபமாக இறந்து கிடந்தார்.இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீசில் புகார் செய்த மாவீரனின் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மாவீரனுடன் அணைக்கட்டுக்கு சென்ற அதே ஊரைச்சேர்ந்த 3வாலிபர்களை பிடித்து டிஎஸ்பி பாலசந்திரன் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: