மாவட்ட உதவி இயக்குனர் ஆய்வு

திருக்கோவிலூர், ஜூலை 23:  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் உள்ள சங்க காலபெரும் புலவர் கபிலர் உயிர்நீத்த குன்றின் அருகில் தமிழக அரசு நினைவு தூண் அமைத்து ஆண்டு தோறும் மலர் அஞ்சலி செய்வதாக சட்ட மன்றத்தில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். அதனையொட்டி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் உத்தரவுப்படி தமிழ் வளர்ச்சி துறையின் விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குனர் சத்தியபிரியா கபிலர் குன்றுக்கு நேரடியாக வருகை புரிந்து நினைவு தூண் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின் போது கபிலர் முத்தமிழ் சங்கத்தின் தலைவர் பாரதிசுகுமாரன், மு.பேரூராட்சி கவுன்சிலர் சம்பத் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: