தந்தை திட்டியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டு மகன் தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே எடப்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த பாஷா மகன் முகமதுநசீர்(20). இவர் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நசீர் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை பாஷா, கல்லூரிக்கு செல்லுமாறு முகமது நசீரை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நசீர் எலிபேஸ்ட்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் எடப்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: